பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 11 ஆயிரம் பேர் முறைகேடாக மதுரை மாவட்டத்தில் பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து வேளாண் அலுவலர்கள் தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு, திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலமாக 3,930 போலியான நபர்கள், ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் முறைகேடாகப் பெற்றுள்ளனர்.
இந்த முறைகேடுகள் அனைத்தும் 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களின் பெயர்களில் நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கிராமங்களில் செயல்பட்டு வரும் தனியார் இ-சேவை நிறுவனங்கள், முகவர்கள் மூலமாகவும் முறைகேடு நடைபெற்றதாக வந்த புகாரை அடுத்து அவர்களிடமும் விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: கிசான் திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடு இல்லை - ஈரோடு ஆட்சியர்