ETV Bharat / state

தமிழர்கள் எழுத்தறிவு உள்ள சமூகமாக வாழ்ந்துள்ளனர் - கீழடி ஆய்வு குறித்து வைகோ பெருமிதம் - mdmk leader lokking keezhadi

மதுரை: தொல்பொருள் ஆய்வு நடத்தப்படும் கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

mdmk leader vaiko
author img

By

Published : Oct 12, 2019, 12:16 PM IST

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்டமாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கீழடியை ஆய்வு செய்தார். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கீழடியில் ஏறத்தாழ பத்தாயிரம் பொருள்கள் கலை நுணுக்கம், தொழில் நுணுக்கம் வாய்ந்த கைவினை சிற்பம் வாய்ந்த பொருள்களை தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

கீழடியை ஆய்வு செய்யும் வைகோ

இதில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள பானை ஓடுகளில் எழுதப்பட்டுள்ள எழுத்துக் குறியீடுகள் அசோகர் காலத்திற்கு முற்பட்டவை, கிராமிய எழுத்து காலத்திற்கு முற்பட்டவைகளாகும். எனவே தமிழ் எழுத்துகளில் உடைய ஆய்வுகள் எழுத்தறிவு உள்ள ஒரு சமூகம் வாழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இங்கு எண்ணற்ற தங்கப் பொருள்கள் கிடைத்திருக்கின்றன. தங்கத்தினாலான அணிகலன்களாக கிடைத்துள்ளன.

சூது பவளம் எனப்படும் விரலளவு இருக்கக்கூடிய ஒரு பொருள் அதில் பன்றியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்ந்த வீடுகளில் நீரோட்டம் செல்வதற்கான வாய்க்கால்கள் அமைத்திருக்கிறார்கள். அதன்மேல் மூடப்பட்டுள்ள குழாய் போன்ற அமைப்புகளும் அமைக்கப்பட்டு உறை கிணறுகள் அமைத்து இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்பொழுது சிந்துவெளி நாகரிகத்திற்கு தொடர்புடைய நாகரிகமாகதான் கீழடி நாகரிகம் பறைசாற்றுகிறது.

இந்த 110 ஏக்கர் நிலத்திலும் ஆய்வு செய்தால் இன்னும் ஆயிரக்கணக்கான பொருள்கள் கிடைக்கக் கூடும். கொந்தகை பனையூர் அகரம் ஆகிய ஊர்களின் பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் சலோனி என்ற பகுதியில் 26.67 ஏக்கர் உள்பட்ட பகுதியில் சடலங்களும் கல்லறைகளும்தான் இருந்தது. ஆனால், அதில் கிடைத்த கனிமப் பொருள்கள் ஆய்வுக்கு உட்படுத்தும் முன்னே அந்த இடத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பொருள்கள் ஆவணமாக கிடைத்தும் இன்னும் ஏன் மத்திய அரசு இந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு மத்திய அரசை வலியுறுத்தி கீழடியில் ஒரு அருங்காட்சியம் அமைக்கவும் இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்த வேண்டும்.

உலகில் தொன்மை நாகரிகம் என்பதற்கு அடையாளச் சின்னங்களில் ஒன்றாக கீழடி அமைந்திருக்கிறது" என்றார்.

Intro:தொல்பொருள் ஆய்வு இடமாகிய கீழடி யை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

tn_mdu_02_Kilati_mdmk_Vaiko_byte_scrip_tn10028 in wrap

*visual* in mojoBody:*தொல்பொருள் ஆய்வு இடமாகிய கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் மதிமுக பொதுச்செயலாளர் ராஜசபா எம்.பி வைகோ பேட்டி*

தொல்பொருள் ஆய்வு இடமாகிய கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் உலகத்தின் மிகப்பழமையான நாகரிகம் தமிழர் நாகரிகம் எழுத்தறிவு உள்ள சமுதாயமாக அந்த காலத்திலேயே வாழ்ந்தார்கள் என்பதையும் அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட கனிம படிவங்கள் கிமு 580 ஆவது வருட தை சார்ந்த பொருள்கள் என்பது தெரிவிக்கிறது.

ஏறத்தாழ பத்து ஏக்கர் பரப்பளவு தான் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.இதற்கு முதற்கட்டமாக அருள் பணியாற்றியவர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் தான்.

அவர்தான் இந்த உண்மைகளை வெளியே கொண்டுவந்தார் ஏறத்தாழ பத்தாயிரம் பொருள்கள் கலை நுணுக்கம் ,தொழில் நுணுக்கம் வாய்ந்த கைவினை சிற்பம் வாய்ந்த பொருட்கள் தமிழர்கள் பயன்படுத்தினர்.

அதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பானை ஓடுகளில் எழுதப்பட்டுள்ள எழுத்துக் குறியீடுகள் அசோகர் காலத்திற்கு முற்பட்டவை கிராமிய எழுத்து காலத்திற்கு முற்பட்டவை எனவே தமிழ் எழுத்துக்களில் உடைய ஆய்வுகள் எழுத்தறிவு உள்ள ஒரு சமூகம் வாழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

அவர்களின் நெசவுத் தொழிலில் உருக்கு தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
எண்ணற்ற தங்க பொருட்கள் கிடைத்திருக்கின்றன தங்கத்தினாலான அணிகலன்களாக கிடைத்துள்ளன சூது பவளம் என்கின்ற விரலளவு இருக்கக்கூடிய ஒரு பொருள் அதில் பன்றியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வாழ்ந்த வீடுகளில் நீரோட்டம் செல்வதற்கான வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதன்மேல் மூடப்பட்டுள்ள குழாய் போன்ற அமைப்புகளும் அமைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
உறை கிணறுகள் அமைத்து இருக்கிறார்கள் இதையெல்லாம் பார்க்கும் பொழுது சிந்துவெளி நாகரீகத்திற்கு தொடர்புடைய நாகரீகமாக தான் கீழடி நாகரிகம் பறைசாற்றுகிறது.

இந்த 110 ஏக்கர் நிலத்திலும் ஆய்வு செய்தால் இன்னும் ஆயிரக்கணக்கான பொருட்கள் கிடைக்க கூடும்.

கொந்தகை பனையூர் அகரம் ஆகிய ஊர்களின் பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

உத்திரபிரதேசத்தில் சலோனி என்கின்ற பகுதியில் 26.67 எக்கர் உட்பட்ட பகுதியில் சடலங்களும், கல்லறைகளும் தான் இருந்தது ஆனால் அதில் கிடைத்த கனிம பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தும் முன்னே அந்த இடத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

ஆனால் 16,000 கணக்கான பொருட்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பொருள்கள் ஆவணமாக கிடைத்தும் இன்னும் ஏன் மத்திய அரசு இந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்படவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அது மட்டுமின்றி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சிவகளைஎன்கின்ற ஊரில் முந்தைய கால பொருட்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருக்கிறார்.

எனவே தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி கீழடியில் ஒரு அருங்காட்சியம் அமைக்கவும் இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்த வேண்டும்

உலகில் தொன்மை நாகரீகம் என்பதற்கு அடையாளச் சின்னங்களில் ஒன்று கீழடி அமைந்திருக்கிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.