ETV Bharat / state

கரோனா பீதி: கீழடி தொல்பொருள் கண்காட்சியகம் மார்ச் 31 வரை மூடல்! - மதுரை மாவ்ட்ட செய்திகள்

மதுரை: கரோனா வைரஸ் அச்சம் காரணமாக மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் இயங்கி வரும் கீழடி தொல்பொருள் அருங்காட்சியகம் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

கீழடி தொல்பொருள் கண்காட்சி
கீழடி தொல்பொருள் கண்காட்சி
author img

By

Published : Mar 16, 2020, 11:43 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு அரசு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் உள்ள உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் இயங்கி வரும் கீழடி தொல்பொருள் அருங்காட்சியகம் , திருமலை நாயக்கர் மஹால் ஆகியவை வருகின்ற மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

மதுரையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் கீழடி தொல்பொருள் கண்காட்சியகம் தமிழ்நாடு மட்டுமன்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வாழ்கின்ற அனைவரையும் ஈர்த்து வருவதால், இங்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 200 பேரில் இருந்து 500 பேர் வரை வருகை தருகின்றனர்.

அதேபோன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெருமளவு ஈர்ப்பதில் திருமலை நாயக்கர் மஹாலுக்கு பெரும்பங்கு உண்டு. இங்கு சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். தற்போது உலக நாடுகளில் மிக தீவிரமாக பரவி வரும் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக, தமிழ்நாடு அரசு வரும் மார்ச் 31ஆம் தேதி வரை பொது சுற்றுலா இடங்களை மூடுவதற்கு அறிவுறுத்தியுள்ள நிலையில் மதுரை தொல்லியல் துறை இவ்விரு இடங்களையும் மூடுவதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மிரட்டும் கரோனா - 19ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.