மதுரை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனுக்கு மேலமாசி வீதியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காவல்துறையினர் தடையின் காரணமாக அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்து மட்டும் சென்றார்.
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் கமல் ஹாசனுக்கு மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், கமல் ஹாசனின் பரப்புரைக்கு தடை விதிக்கப்பட்டது. முன்னதாக, காலை மதுரை விமான நிலையத்தில், சட்டத்துக்கு உட்பட்டுதான் பரப்புரையை மேற்கொள்வேன் என கமல் ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சீரமைப்போம் தமிழகத்தை' - இன்றுமுதல் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை