ETV Bharat / state

பாடத்திட்டத்தில் திருக்குறளை தவிர்ப்பதா? - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை - பள்ளிக்கல்வித்துறை

மாணவர்களுக்கு அறிவுரை கூறும் பெற்றோரையும், ஆசிரியரையும் மாணவர்கள் தாக்கும் சூழ்நிலை உள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி மிக அவசியம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

மாணவர்களை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி மிக அவசியம் என நீதிபதிகள் கருத்து

author img

By

Published : Oct 18, 2022, 7:00 PM IST

மதுரை: மதுரையை சேர்ந்த ராம்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "2016 உயர் நீதிமன்ற உத்தரவின்படி திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அடங்கிய 1050 திருக்குறள்களை 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் முழுமையாக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அடங்கிய 108 அதிகாரங்களில் 1050 திருக்குறள்கள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க அரசாணை வெளியிட்டது.

ஆனால், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் திருக்குறள் பெயரளவில் மட்டுமே உள்ளது. மொத்தமாகவே 30 முதல் 60 திருக்குறள்கள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பாடத்திட்டத்திலும் திருக்குறள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது அதன் பொருள் கொடுக்கப்படவில்லை. மாணவர்கள் தேர்வு எழுதும் பொழுதும் திருக்குறள்கள் பெயரளவில் மட்டுமே இடம்பெறுகிறது.

திருக்குறள்களையும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்க்கவும், தேர்வில் திருக்குறள் சம்பந்தமான கேள்விகள் இடம் பெறக் கோரியும் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் திருக்குறள் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அடங்கிய 108 அதிகாரங்களில் 1050 திருக்குறள்கள் பொருள் உடன் இடம் பெற உத்தரவிட வேண்டும். மேலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை திருக்குறளில் உள்ள 108 அதிகாரங்களையும் மாணவர்களுக்கு கற்பிக்க உத்தரவிட வேண்டும்.

மேலும் தேர்விலும் திருக்குறள்கள் சம்பந்தமான கேள்விகள் இடம் பெற உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், திருக்குறள் இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தக் கூடியது. 1000 திருக்குறளில் 5 திருக்குறள்களின் பொருளை மாணவர்கள் உணர்ந்தாலே அவர்களை நல்வழிப்படுத்த முடியும்.

மாணவர்களுக்கு அறிவுரை கூறும் பெற்றோரையும், ஆசிரியரையும் தாக்கும் சூழ்நிலை உள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி மிக அவசியம். திருக்குறளில் 108 அதிகாரங்களில் 1050 குறள்களை மாணவர்களுக்கு கட்டாயம் கற்பிக்க வேண்டும் என 2017ல் அரசாணை உள்ளது அதனை ஏன் சரிவர பின்பற்றவில்லை. தற்போது நடைபெறும் பள்ளி தேர்வுகளிலுள்ள வினாத்தாள்கள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பயனற்றதாக உள்ளது. இதே நிலை நீடித்தால் தேர்வு வினாத்தாள் அமைக்கும் குழுவினை கலைக்க நேரிடும்.

திருக்குறள்கள் பாடத்திட்டத்தில் சரிவர நடைமுறைப் படுத்தாவிட்டால் பள்ளிக்கல்வித்துறை செயலர் ஒவ்வொரு விசாரணையிலும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ் வளர்ச்சித் துறை செயலர், தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: மதுரையில் 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால சிலைகள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.