ETV Bharat / state

மதுரையின் மூத்த செய்தியாளர் சரவணன் கரோனாவால் உயிரிழப்பு

மதுரை: கரோனா பாதிக்கப்பட்ட மதுரையின் மூத்த செய்தியாளர் சரவணன் நேற்றிரவு (மே.8) சிகிச்சை பலனின்றி காலமானார்.

மூத்த செய்தியாளர் சரவணன்
மூத்த செய்தியாளர் சரவணன்
author img

By

Published : May 9, 2021, 4:17 PM IST

கரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் உயிரிழந்துவருகின்றனர். அதைப் போலவே ஊடகத் துறையிலும் பல உயிரிழப்புகள் நேர்ந்துவருகிறது. இந்நிலையில் மதுரையில் சற்றேறக்குறைய 15 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகை துறையில் அனுபவம் கொண்ட செய்தியாளர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

பிரபல ஆங்கில நாளேட்டின் ஞாயிறு இணைப்பில் மதுரை செய்தியாளராக பணியாற்றிவர், சரவணன் (52). இவர் சென்னையில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தியாளராகவும் பணியாற்றினார். கடந்த வாரம் இவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்நிலையில் திடீரென கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த வியாழனன்று (மே.6) மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, கடும் மூச்சுத் திணறல் ஏற்படவே தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு சுயநினைவு இழந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டும், நேற்றிரவு (மே.8) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஊடகவியலாளர் சரவணன், நல்ல ஆங்கில புலமையும், எழுத்துத்திறமையும் கொண்டவர். தான் ஆங்கில இலக்கிய மாணவனாக இருந்த அமெரிக்கன் கல்லூரியில், நாடகத்துறையின் ஒரு அங்கமாகவே அவர் இருந்தார். அவ்வப்போது கல்லூரி நாடகங்களில் நடிக்கவும் செய்தார். மதுரையில், நிஜ நாடக இயக்கம், நிகழ் நாடகக்குழு, அமெரிக்கன் கல்லூரியின் 'fourth wall productions', போன்ற அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். சுவையான உணவுகளை தேடி தேடி ருசித்து, அவற்றை பற்றி எழுதுவார். மதுரையில் உள்ள அத்துனை சிறப்பான பாரம்பரியமான உணவகங்களும் அவருக்கு அத்துப்படி.

மூத்த செய்தியாளர் சரவணன்
மூத்த செய்தியாளர் சரவணன்

கரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்குதலில் மதுரையின் மூத்த புகைப்பட செய்தியாளர் நம்பிராஜன் ஓரிரு நாட்களுக்கு முன்பு இறந்த நிலையில், இரண்டாவதாக பத்திரிகையாளர் சரவணன் உயிரிழந்தது மதுரையில் செய்தியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'நேற்று தொடக்கம்; இன்று நிறுத்தம்' ரெம்டெசிவருக்கு அலையும் மதுரைவாசிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.