உலகப்புகழ் பெற்ற மதுரை மல்லிகை, மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்ற மலர் ஆகும். மதுரை மல்லிக்கு உலகளாவிய சந்தை உண்டு. இங்கிருந்து இந்தியாவின் பிற மாநிலங்கள் மட்டுமன்றி, தெற்காசிய நாடுகள் பலவற்றிற்கு மதுரை மல்லிகை ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில், தீபாவளி, பண்டிகை காலத்தை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள மலர்ச்சந்தையில் மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூ.1400க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது. ஆனால் கடந்த சில நாள்களாக விலை மளமளவென சரிந்து தற்போது ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், பிற பூவின் விலையும் பெருமளவு சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக பிச்சிப்பூ ரூ.300, முல்லைப்பூ ரூ.300, சம்பங்கி ரூ.70, செவ்வந்தி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.80, பட் ரோஸ் ரூ.70, மெட்ராஸ் மல்லி ரூ.200, தாமரை ஒன்று ரூ.6 மற்றும் பிற பூவின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
இனி வரவிருக்கும் முகூர்த்த நாள்களைப் பொறுத்து பூவின் விலை கணிசமாக உயரும் என வியாபாரிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.