ETV Bharat / state

ஜல்லிக்கட்டு: ஆன்லைன் பதிவுமுறைக்கு வீரர்கள் கடும் எதிர்ப்பு

கரோனா பெருந்தொற்று காரணமாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுத் திருவிழாவில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள், காளைகள் ஆன்லைன் வழியாகப் பதிவுசெய்ய வலியுறுத்தும் மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்கு மாடுபிடி வீரர்களிடம் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது

ஜல்லிக்கட்டு: ஆன்லைன் பதிவுமுறைக்கு வீரர்கள் கடும் எதிர்ப்பு
ஜல்லிக்கட்டு: ஆன்லைன் பதிவுமுறைக்கு வீரர்கள் கடும் எதிர்ப்பு
author img

By

Published : Jan 11, 2022, 6:25 PM IST

Updated : Jan 11, 2022, 6:37 PM IST

மதுரை: தைத்திருநாளை முன்னிட்டு அவனியாபுரம் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், கரோனா தொற்றின் காரணமாகத் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மாடுபிடி வீரர்களும் காளைகளும் தங்களது பெயர்களை இன்று மாலை 3 மணி தொடங்கி நாளை மாலை 5 மணி வரை ஆன்லைன் வழியாகப் பதிவுசெய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

இணையவழி ஏற்கத்தக்கதல்ல

இந்நிலையில், மாடுபிடி வீரர்களும் காளை மாட்டின் உரிமையாளர்களும் இந்த முறைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ”இணையம் வழியாகப் பதிவுசெய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

மேலும் இதுபோன்ற நவீனத் தொடர்பு முறைகளில் மாடுபிடி வீரர்களுக்கும் அல்லது காளை மாட்டின் உரிமையாளர்களுக்கும் அவ்வளவாக அறிமுகம் இல்லாத நிலையில், இணைய வழியாகப் பதிவுசெய்ய மாவட்ட நிர்வாகம் வலியுறுத்துவது ஏற்கத்தக்கதல்ல.

அதுமட்டுமன்றி இதுபோன்ற அறிவிப்பால் அனுபவமில்லாத இளைஞர்களும் ஆர்வக்கோளாறு காரணமாக இணைய வழியில் தங்களது பெயரைப் பதிவுசெய்ய வாய்ப்பு உள்ளது. அதற்கு என்ன மாதிரியான நடைமுறைகளை மேற்கொள்ள முடியும்?

மேலும் பீட்டா போன்ற நிறுவனங்கள் ஜல்லிக்கட்டைத் தடைசெய்வதற்குப் பல்வேறு வகையில் முயன்ற நிலையில், தற்போது கரோனாவைக் காரணம் காட்டி, ஜல்லிக்கட்டு மீதான ஆர்வத்தை நீர்த்துப்போக முயற்சி செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஜல்லிக்கட்டு: ஆன்லைன் பதிவுமுறைக்கு வீரர்கள் கடும் எதிர்ப்பு

போதிய கால அவகாசம் இல்லை

அது மட்டுமின்றி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க ஒரு போட்டியில் 300 வீரர்களுக்கும் 700 காளைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில், அவனியாபுரத்தில் மட்டுமே ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்கள் உள்ளனர்.

அவர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக இ-சேவை மையத்தை அணுகும்போது அதனால் பதிவில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற நடைமுறைகளுக்குக் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது கால அவகாசம் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்.

ஆகையால் உடனடியாக பழைய முறைப்படி ஏதேனும் ஒரு இடத்திற்கு மாடுபிடி வீரர்களையும் காளைகளையும் வரச்செய்து டோக்கன் வழங்குவதே சரியாக இருக்கும்” என்றனர்.

இதையும் படிங்க:நரேந்திர மோடியை படுகொலை செய்ய திட்டம் - பகீர் கிளப்பும் ஹெச். ராஜா

Last Updated : Jan 11, 2022, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.