இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோயிலின் 69ஆவது ஆண்டு பங்குனி உற்சவ விழா இன்று (ஏப்.9) கோலாகலமாக நடைபெற்றது. இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்து வந்து அம்மனை தரிசித்தனர்.
குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் இக்கோயில் திருவிழா 5 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கரோனா தொற்று காரணமாக நாளை (ஏப். 10) முதல் திருவிழா, மத வழிபாடுகள் நடத்துவதற்கு தடை என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இன்று ஒரே நாளில் திருவிழாவை நடத்துவதற்கு கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்து வருதல், முளைப்பாரி எடுத்து வீதி உலா சுற்றுதல், திருவிளக்கு பூஜை என 5 நாள்கள் நடைபெறக்கூடிய திருவிழா இன்று ஒரே நாளில் நடந்து முடிந்தது.
இதையும் படிங்க: புதுப்பட்டு மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா!