மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பு பிரியன் என்பவரது மகன் வெள்ளை பிரியன் (27). இவரது மனைவி அபிநயாவை சில ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றில் தள்ளிவிட்டுக் கொலை செய்ததாக இவர் மீது தொடரப்பட்ட வழக்கில், மத்திய சிறைச்சாலையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெள்ளை பிரியன் இன்று அதிகாலை சிறைச்சாலை கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் வெள்ளை பிரியனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: நல்லெண்ண அடிப்படையில் 1000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிப்பு!