ETV Bharat / state

'இத்தோடு அனைத்தையும் நிறுத்திக் கொள்ளுங்கள்..!' - கமல்ஹாசன் ஆவேசம்! - சரித்திர உண்மை

மதுரை: "சரித்திர உண்மையை யாராலும் மாற்ற முடியாது. இந்த பேச்சை வைத்து எங்களை முடக்க நினைப்பவர்கள், இத்தோடு அனைத்தையும் நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று, கமல்ஹாசன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
author img

By

Published : May 15, 2019, 8:52 PM IST

Updated : May 15, 2019, 10:44 PM IST

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனர் நடிகர் கமல்ஹாசன் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது மத்தியில் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. பெண்கள் குடிநீருக்கான அலைவதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுக்காமல், நான் பேசிய ஒன்றை தவறாக இட்டுக்கட்டி என்மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

நான் சொன்ன தகவலில் எந்தவித தவறும் இல்லை. அது சரித்திர பூர்வமான உண்மை. உண்மையை யாராலும் மாற்ற இயலாது. சாதி, மதத்திற்கு ஆதரவு தெரிவித்தது கிடையாது. நான் சொன்ன விஷயம், ஊடகங்களால் திரித்துக் கூறப்பட்டு விட்டது. நான் செய்தது குற்றம் எனில், ஊடகங்கள் அதனை திரும்பத் திரும்ப செய்திருக்கின்றன. என் மீது சாட்டப்பட்ட அதே குற்றம் ஊடக நண்பர்களுக்கும் பொருந்தும்.

நான் இந்துவா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் எனது வீட்டில் உள்ளோர், என்னை சார்ந்திருப்போர் எல்லோருமே இந்துக்கள்தான். அவர்கள் மனம் புண்படும்படி நான் பேசியதாக யாரும் என்னைக் குற்றம் சுமத்தவில்லை. இந்த விசயத்தை வைத்து எனது பரப்புரையை தடுத்து நிறுத்த முயற்சி செய்தால், எனது ரசிகர்களும் பொதுமக்களும் களத்திற்கு வந்து எனது பணியைச் செய்வார்கள்.

என்னைப் பின்பற்றும் எனது ரசிகர்கள் மிகத் தீவிரமானவர்கள். களப்பணியில் நானும் தீவிரமானவன். தீவிரவாதி என்ற வார்த்தை எப்படி தவறாகும். எங்களுக்கான கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களை முடக்க நினைப்பவர்களுக்கு எனது மேலான ஆலோசனை அறிவுரை, இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்பதுதான்" என்றார்.

Intro:நான் சொன்னது சரித்திர உண்மை ஆகையால் அதை யாரும் மாற்ற முடியாது என்று நடிகர் கமலஹாசன் மதுரை பரப்புரையில் பேச்சு

Body:திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் நடிகர் கமலஹாசன் இன்று மதுரை மாவட்டம் திருப்பூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் அப்போது பேசிய அவர் தமிழகம் முழுவதும் மிக கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது மக்கள் குடிநீருக்கு அல்லாஹ் இதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது ஆனால் அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையில் நான் பேசிய ஒன்றை தவறாக இட்டுக்கட்டி என்மீது குற்றம் சுமத்துகிறார்கள்

நான் சொன்ன தகவலில் எந்தவித தவறும் இல்லை அது சரித்திர பூர்வமான உண்மை உண்மையை யாராலும் மாற்ற இயலாது என்னுடைய படங்கள் அனைத்திலும் சமுதாய கருத்துக்களை முன்வைத்து நான் நடித்து இருக்கிறேன் சாதி மதம் என எவற்றுக்கும் நான் ஆதரவு தெரிவித்தது கிடையாது அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையில் நான் சொன்ன விஷயங்கள் ஊடகங்களால் திரித்துக் கூறப்பட்டு விட்டது நான் செய்தது குற்றம் என்றால் ஊடகங்கள் அதனை திரும்பத் திரும்ப செய்திருக்கின்றன என் மீது சாட்டப்பட்ட அதே குற்றம் ஊடக நண்பர்களுக்கும் பொருந்தும்

நான் இந்துவா இல்லையா என்பது வேறு விஷயம் ஆனால் எனது வீட்டில் உள்ளோர் என்னை சார்ந்திருப்போர் எல்லோருமே இந்துக்கள் தான் அவர்கள் மனம் புண்படும்படி நான் பேசியதாக அவர்கள் யாரும் என்னைக் குற்றம் சுமத்தவில்லை ஆகையால் இந்த விஷயத்தை வைத்து எனது பரப்புரையை தடுத்து நிறுத்த முயற்சி செய்வீர்களேயானால் எனது ரசிகர்களும் பொதுமக்களும் களத்திற்கு வந்து எனது பணியைச் செய்வார்கள்

என்னைப் பின்பற்றும் எனது ரசிகர்கள் மிகத்தீவிர மாணவர்கள் அதேபோன்று களப்பணியில் நானும் தீவிரமானவன் ஆகையால் தீவிரவாதி என்ற வார்த்தை எப்படி தவறாகும் எங்களுக்கான கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எங்களை முடக்க நினைப்பவர்களுக்கு எனது மேலான ஆலோசனை அறிவுரை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்பது தான் என்றார்

நடிகர் கமல் தோப்பூரில் பரப்புரை மேற்கொள்வது அடுத்து இன்று அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உட்படுத்தப்பட்டனர் மேலும் கமலஹாசன் எதிர்த்து இந்து முன்னணி அமைப்பினர் கருப்புக்கொடி காட்டுவதாக அறிவித்திருந்த நிலையில் போலீசார் கடும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்

Conclusion:
Last Updated : May 15, 2019, 10:44 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.