ETV Bharat / state

வங்கதேசத்திற்குப் பறந்த வாடிப்பட்டி 'டிராக்டர்கள்' - மதுரை கோட்ட ரயில்வே சாதனை!

மதுரை: வாடிப்பட்டியிலிருந்து வங்கதேசத்துக்கு நூறு 'டிராக்டர்கள்' ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

வங்கதேசத்திற்கு பறந்த வாடிப்பட்டி ட்ராக்டர்கள்

author img

By

Published : May 30, 2021, 7:46 AM IST

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியிலிருந்து வங்கதேசத்துக்கு நூறு ட்ராக்டர்கள் நேற்று (மே. 29) ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டன. மதுரை கோட்டம் ரயில்வே, இதன் மூலம் ரூ. 23 லட்சம் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் இருந்து வங்கதேசத்திற்கு நூறு 'டிராக்டர்கள்' அனுப்பி வைக்கப்பட்டன. வாடிப்பட்டி ரயில் நிலையத்திலிருந்து புனரமைக்கப்பட்ட 25 சரக்கு பெட்டிகளில் நூறு 'டிராக்டர்கள்' வங்கதேசத்தில் உள்ள பேனாபோல் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வங்கதேசத்திற்கு பறந்த வாடிப்பட்டி ட்ராக்டர்கள்
வங்கதேசத்திற்குப் பறந்த வாடிப்பட்டி 'டிராக்டர்கள்'

இந்த நிதியாண்டில் வாடிப்பட்டி ரயில் நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் முதல் சரக்கு ரயில் இதுவாகும். சென்ற நிதியாண்டில் இதுபோல மூன்று சரக்கு ரயில்கள் வாடிப்பட்டியிலிருந்து வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் 23 லட்சத்து 15 ஆயிரத்து 962 ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசுக்கு அதிமுக எப்போதும் துணை நிற்கும்: ஆர். காமராஜ் எம்.எல்.ஏ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.