கரோனா ஊரடங்குக்குப் பின் கோயில்கள் இன்னும் திறக்கப்படாத சூழ்நிலையில், ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலல் உள்ள 36 உண்டியல்களின் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கி மாலை நான்கு மணி வரை கோயிலின் உள்ளே நடைபெற்றது. இந்தப் பணியில் கோயில் அலுவலர்கள் மட்டுமே ஈடுபட்டனர்.
கோயில் உண்டியல்கள் அனைத்தும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் முதன்மை அலுவலர் ராமசாமியின் மேற்பார்வையில் திறக்கப்பட்டன.
இதில் பக்தர்கள் காணிக்கையாக 18 லட்சத்து 79 ஆயிரத்து 163 ரூபாய் ரொக்கமாகவுமம், 125 கிராம் தங்கமாகவும், ஒரு கிலோ 338 கிராம் வெள்ளியாகவும் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மூடப்பட்டதால் கோயிலுக்கு வெளியே உள்ள உண்டியல்களில் பக்தர்கள் அதிக அளவு காணிக்கை அளித்துள்ளதாக கோயில் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.