தஞ்சை பெரியகோயிலில் தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிட்டுள்ளதால் தடைகோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சரவணன் தரப்பில் நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக இந்த முறையீடு முன்வைக்கப்பட்டது.
தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை பெரியகோயில், குடமுழுக்கு விழாவை நடத்த தடைவிதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனக் கோரினார்.
அதனை மனுவாக தாக்கல்செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அரசுத் தரப்பில் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்குகளை நாளை பட்டியலிடுமாறு கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் வழக்குகளை நாளை ஒத்திவைத்துள்ளனர்.
மைலாப்பூரைச் சேர்ந்த ரமேஷ், சமஸ்கிருதத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியின் தலைவர் மணியரசன், தமிழிலேயே குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் அதனை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரினர்.
இதையடுத்து நீதிபதிகள் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு நிகழ்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்வரை ஓயமாட்டேன் - பெ மணியரசன்