தூத்துக்குடியைச் சேர்ந்த கிதர் பிஸ்மி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பல்சமய பேரியக்கம் என்ற அமைப்பை தூத்துக்குடியில் உருவாக்கியுள்ளோம். இதில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதில் இணைந்துள்ளன.
இந்த அமைப்பு சார்பில் தூத்துக்குடியில் சிதம்பரநகர் VVD சிக்னல் அருகே பொதுக்கூட்டம் நடைபெற அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், அதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுமதி தர மறுத்துவிட்டார். எனவே, எங்களுக்கு அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்ச் 13ஆம் தேதி மாலை 5 மணி முதல் 10 மணி வரைப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும் 'இந்தக் கூட்டத்தில் 750 பேர் பங்கேற்கலாம், சட்டத்திற்கு உட்பட்டு பேச வேண்டும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது' எனவும் தனது தீர்ப்பில் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கொரோனாவை தடுக்க இத்தாலியில் புதிய கட்டுப்பாடு