ETV Bharat / state

தமிழ் வழிக்கல்வி பயின்றதற்கான போலி சான்றிதழ் குறித்து அனைத்து பல்கலைக்கழகத்திலும் விசாரணை நடத்தலாமே என நீதிமன்ற கருத்து. - TNPSC news

Tamil Language Education Reservation: தமிழ் வழிக் கல்வி பயின்றதாக போலி சான்றிதழ் வழங்கிய 5 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது என நீதிமன்றத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

குரூப்-1 தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 7:44 PM IST

மதுரை: திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1-ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. அதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன்.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, எழுத்து தேர்வும் எழுதினேன். தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

தொலைநிலை கல்வியில் பயில்வோர் சில பாடங்களை ஆங்கில வழியில் பயில்கின்றனர், சில பாடங்களை தமிழ் வழியில் படிக்கின்றனர். ஆகவே, இவர்களை தமிழ் வழியில் பயின்றவர்களாக கருத இயலாது. TNPSCயின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20 சதவிகித இட ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலை கல்வி பயின்றவர்களே பெற்று வருகின்றனர்.

ஆகவே, தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சலுகை அடிப்படையில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும். தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். தொலைநிலை கல்வியில் அல்லாமல் கல்லூரிக்கு சென்று தமிழ் வழியில் பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப் 1 பணியிட நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவுகள் குறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வில்லை என்பதால், சக்தி ராவ் மீண்டும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பில், இந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதனுடைய இடைக்கால நிலை அறிக்கையை சீல் இடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தரப்பில், தமிழ் வழிக் கல்வி பயின்றதாக போலி சான்றிதழ் வழங்கிய 5 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இதுபோல் தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் விசாரணை நடத்தலாமே என கருத்து தெரிவித்து வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சவால்கள் நிறைந்த பயணம்!...ஆதித்யா எல்1 விண்கலம் எதிர்கொள்வது எப்படி?... மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.