ETV Bharat / state

அண்ணாமலை பல்கலை. பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை - Madurai High court Bench

முதுகலை பட்டப்படிப்பு தகுதி பெறாத சிறப்பு அலுவலர்களை, பணியிறக்கம் மற்றும் ஊதியக் குறைப்பு செய்து அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்
author img

By

Published : Dec 20, 2022, 8:18 PM IST

மதுரை: கரூரைச் சேர்ந்த மகேஷ் குமார், மதுரையைச் சேர்ந்த தனசேகர பாண்டியன், ராஜரத்தினம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, "கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அதிகம் உள்ள நிலையில், அவர்கள் வெவ்வேறு துறைகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் போன்ற பணிகளில் பணி அமர்த்தப்பட்டனர். அதன் அடிப்படையில் நாங்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டோம்.

சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டதற்கு இரண்டாம் தரத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆனால், பலர் அத்தகுதியைப் பெறவில்லை. இதனால் கடந்த 2015ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு, இரண்டாம் தரத்தில் முதுகலை பட்டப் படிப்பு படித்தவர்களை சிறப்பு அலுவலர்களாகவும், தகுதி பெறாதவர்களை சிறப்பு அலுவலர் கிரேட் 2 என்றும் பிரித்தனர்.

இதனால் ஊதியம் குறைக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஊழியர்களின் ஆட்சேபனைகளை கேட்டறிந்து புதிய முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி உரிய தகுதி பெறாதவர்களை கிரேடு 2 சிறப்பு அலுவலர்களாகப் பதிவிறக்கம் செய்தும், அவர்களுக்கான ஊதிய குறைப்பு செய்தும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் உத்தரவிட்டார். பதிவிறக்கம் மற்றும் ஊதிய குறைப்பு தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.