ETV Bharat / state

ஊராட்சி நிதி நூதன முறையில் கையாடல் செய்த அதிகாரிகள்: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் ஆணை! - government officials fraud in government fund

தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்குகளில் ஊராட்சி நிதியை செலுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி துணைத்தலைவர், தனி அலுவலர், ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 10:57 PM IST

மதுரை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி தமிழகத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகும். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது ஊராட்சி மன்ற தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. அதன் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஊராட்சி துணைத்தலைவர் பாண்டியராஜன், பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டு, வார்டு உறுப்பினர் நல்லம்மாள் செல்வராணி அவருக்கு துணையாக, ஊராட்சி நிர்வாகத்தைக் கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் ஊராட்சி நிதியைக் கையாடல் செய்வதாகவும், முறைகேடு செய்வதாகவும் புகார்கள் எழுந்ததையடுத்து நல்லம்மாள் செல்வராணி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து 2021 ஆகஸ்ட் மாதம் முதல், தனி அலுவலர் மற்றும் துணைத்தலைவர் பாண்டியராஜன் ஊராட்சியின் பணிகள் மற்றும் வரவு செலவு கணக்குகளைக் கவனித்து வந்துள்ளார்.

ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை ஊராட்சியின் கணக்குகளைத் தணிக்கை மேற்கொண்டதில், பல இலட்ச ரூபாய் பணத்திற்கு முறையான கணக்கு இல்லாமல் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகத் தணிக்கை அதிகாரி அறிக்கை சமர்பித்தனர். இதற்கிடையே ஆகஸ்ட் 2021 முதல் தனி அலுவலர், துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் தற்காலிக தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்குகளில் கையாடல் செய்த ஊராட்சி நிதி மற்றும் முறைகேடு செய்த பணத்தை வரவு வைத்து மோசடி செய்துள்ளனர்.

ஊராட்சி நிதியிலிருந்து கிட்டத்தட்ட 1 கோடியே 36 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயை தற்காலிக தூய்மை பணியாளர்கள் வங்கி கணக்குகளில் செலுத்தி, அதை முறைகேடு செய்து அவர்களது பெயரிலும் மற்றும் அவர்களின் உறவினர்களின் பெயர்களில் சொத்துக்களை வாங்கி உள்ளனர்.

ஊராட்சி நிதியில் கையாடல் செய்து, முறைகேட்டில் ஈடுபட்டு சொத்துக்களை வாங்கி குவித்த துணைத்தலைவர் பாண்டியராஜன், தனி அதிகாரி மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இராமநாதன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்குத் தள்ளி வைத்து உத்தரவு உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல்: நீதிபதி சந்துரு தலைமையிலான குழு 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.