சிவகங்கை மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த கலைலிங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள சுமார் 323.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது.
இந்த திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், சிவகங்கை, பனைக்குளம் கண்மாயை தூர்வார ரூ.27 லட்சம் செலவு செய்யப்பட்டதாகவும், சிவகங்கை மாவட்டம் முழுவதும் குடிமராமத்துப் பணிக்காக ரூ.5கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகச் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணக்கு காட்டியுள்ளார்.
இந்தக் குடிமராமத்துப் பணிகளில் பலமுறைகேடுகள் நடந்துள்ளது. குறிப்பாக பனைக்குளம் கிராமத்தில் தனி நபர்கள் சங்கம் ஆரம்பித்து குடிமாரமத்துப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்துள்ளனர். இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, மனுதாரரின் குற்றச்சாட்டில் உண்மை கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கச் சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: வடசென்னை 'ரவுடி' காக்கா தோப்பு பாலாஜி கைது!