ETV Bharat / state

மதுரை வீதிகளில் யாசகம்பெற்ற மலாச்சி யானைக்கு விடுதலை..!

வனவிலங்கில் பெரியதான யானைகளுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் துன்பத்தில் இருந்து மீள, மலாச்சி யானை வழக்கில் உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மலாச்சி யானை இருந்த கிராமம்
author img

By

Published : Jun 15, 2019, 9:43 PM IST

Updated : Jun 15, 2019, 10:51 PM IST

மலாச்சி யானையின் வருகை

2007ஆம் ஆண்டு அந்தமானைச் சேர்ந்த ஆங் மின்ட் - மேஸன் தம்பதி தாங்கள் வளர்த்த பல யானைகளுள் ஒன்றை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாகத் தர விரும்பினர். அதன்படி, 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி அந்த யானையை லட்சுமணன் என்பவரின் மனைவி இந்திராவிடம் அந்தமான் தம்பதிகள் ஒப்படைத்தனர்.

யாசகம் பெற்ற மலாச்சி

இந்திரா மலாச்சி யானையை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல், மதுரை வீதிகளில் யாசகம் பெற வைத்தும், நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தும், அதை துன்புறுத்தி வருமானம் பார்த்து வந்தார்.

யாசகம் பெறும் மலாச்சி யானை
யாசகம் பெறும் மலாச்சி யானை

மின்சாரம் தாக்கி பாகன் உயிரிழப்பு

2016ஆம் ஆண்டு மலாச்சியின் மேல் அமர்ந்து தெருக்களில் பாகன் சென்றபோது, உயர்அழுத்த மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த விபத்தில் மலாச்சியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பின்னர் மீண்டெழுந்தது.

கிராம மக்கள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம், வடபழஞ்சிக்கு அருகேயுள்ள தென்பழஞ்சி கிராமத்தில் அந்த யானைக்கு தனியாக கொட்டம் வைத்து இந்திரா பராமரித்து வந்த நிலையில், வாரத்திற்கு இரண்டு, மூன்று நாட்கள் இந்தக் கொட்டத்தில் யானை இருந்தாலே அதிசயம்தான். பெரும்பாலும் வேனில் ஏற்றி எங்கேனும் கொண்டு சென்றுவிடுவார்கள் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

மலாச்சி யானை
மலாச்சி யானை

வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர்:

யானையை மீனாட்சி கோயிலில் ஒப்படைக்க சொன்னதை செய்யாமால் அதன் காப்பாளர் தெருக்களில் யாசகம் பெற வைப்பதோடு, துன்புறுத்தவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மேலாண்மை, பராமரித்தல் சட்டம் 1960 விதிகளின்படி யானையை இவ்வாறு துன்புறுத்துவது மிகத்தவறானது என சென்னையைச் சேர்ந்த இன்கேர் என்ற அமைப்பின் சார்பாக விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடுத்திருந்தார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பு

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், யானையை முறைகேடாக பயன்படுத்திய காரணத்திற்காக இந்திராவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், யானையைப் பிச்சையெடுக்க வைத்து துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதால், அதை பறிமுதல் செய்து வனத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், மிருகக்காட்சி சாலையிலோ அல்லது விலங்குகள் பாதுகாப்பு முகாமிலோ பராமரிக்கவும் வனத்துறைக்கு உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

நகரமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக யானைகளின் இருப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில், வனத்திலிருந்து கைப்பற்றி வந்து, தெருக்களில் யாசகம் எடுக்க வைப்பதும், வேடிக்கை காட்டி வித்தைக்கு தயார்படுத்துவதும் தவறான ஒன்று என நம் சட்டங்கள் வலியுறுத்தி வருகின்றன. அதனை மீறி இதுபோன்று செயல்படும் சிலருக்கு மலாச்சி யானை குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது மட்டுமல்ல... ஆகச் சிறந்ததுமாகும்...

சமூக ஆர்வலர்கள் வரவேற்பு
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தானமாக வந்த யானை மலாச்சி, மதுரை தெருக்களில் யாசகமெடுத்த அவலத்திலிருந்து மீட்டு, விலங்குகள் காப்பகத்திற்கோ அல்லது சரணாலயத்திற்கோ அனுப்ப வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு வன விலங்கு ஆர்வலர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.

Intro:மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாக வந்த யானை மலாச்சி, மதுரை தெருக்களில் பிச்சையெடுத்த அவலத்திலிருந்து மீட்டு, விலங்குகள் காப்பகத்திற்கோ அல்லது சரணாலயத்திற்கோ அனுப்ப வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு வன விலங்கு ஆர்வலர்களைக் உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. இது குறித்த ஓர் செய்தித் தொகுப்புBody:மதுரை தெருக்களில் பிச்சையெடுத்த மலாச்சி யானைக்கு விடுதலை - செய்தித் தொகுப்பு

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாக வந்த யானை மலாச்சி, மதுரை தெருக்களில் பிச்சையெடுத்த அவலத்திலிருந்து மீட்டு, விலங்குகள் காப்பகத்திற்கோ அல்லது சரணாலயத்திற்கோ அனுப்ப வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு வன விலங்கு ஆர்வலர்களைக் உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. இது குறித்த ஓர் செய்தித் தொகுப்பு

கடந்த 2007-ஆம் ஆண்டு அந்தமானைச் சேர்ந்த ஆங் மின்ட், மேஸன் தம்பதிகள் தாங்கள் வளர்த்த பல யானைகளுள் ஒன்றை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாகத் தர விரும்பினர். கடந்த 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி இந்த யானை, லட்சுமணன் என்பவரின் மனைவியான இந்திரா என்பவரிடம் அந்தமான் தம்பதிகள் ஒப்படைத்தனர்.

ஆனால் அந்தமான் தம்பதிகளிடமிருந்து யானையைப் பெற்றுக் கொண்ட இந்திரா - லட்சுமணன் ஆகியோர், முறைப்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் யானை மலாச்சியை ஒப்படைக்கவில்லை. மாறாக, மதுரை தெருக்களில் பிச்சையெடுக்க வைத்தும், விழாக்களில் பங்கேற்க வைத்தும் பணம் சம்பாதித்தாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

யானை உள்ளிட் வனவிலங்குகள் மேலாண்மை மற்றும் பராமரித்தல் சட்டம் 1960 விதிகளின்படி யானையை இவ்வாறு துன்புறுத்துவது மிகத் தவறானது என சென்னையைச் சேர்ந்த இன்கேர் என்ற அமைப்பின் சார்பாக விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்திருந்தார்.

இதுகுறித்து நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு தொலைபேசி வழியாக வழங்கிய நேர்காணலில், 'அந்தமான் தம்பதிகளால் மதுரை மீனாட்சி கோவிலுக்கு வழங்கப்பட்ட இந்த யானை, மிக இளவயது என்பதால் சற்று துடிப்பானதாகவே இருந்தது. அதன் வழக்கத்திற்கு மாறாக சித்திவதை செய்து பயிற்சி அளித்து, விழாக்களில் பங்கேற்க வைத்தனர்.

மேலும் கடந்த 2016-ஆம் ஆண்டு மலாச்சியின் மேல் அமர்ந்து தெருக்களில் பயணம் சென்றபோது, பாகன் ஒருவர் உயர்அழுத்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த சமயம் மலாச்சியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்தது. ஆகையால் வன விலங்குகளை குறிப்பாக யானைகளை இது போன்ற சித்திரவதைக்கு உட்படுத்துவது வன விலங்குகள் சட்டத்தின்படி மிகத் தவறானதாகும்' என்றார்.

கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றம் மலாச்சி குறித்த வழக்கில், நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு, யானையை முறைகேடாகப் பயன்படுத்திய காரணத்திற்காக இந்திராவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், யானையைப் பிச்சையெடுக்க வைத்து துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதால் அதைப் பறிமுதல் செய்து வனத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், மிருகக்காட்சி சாலையிலோ அல்லது விலங்குகள் பாதுகாப்பு முகாமிலோ பராமரிக்கவும் வனத்துறைக்கு உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் வடபழஞ்சிக்கு அருகேயுள்ள தென்பழஞ்சி கிராமத்தில் மலாச்சி யானைக்கு தனியாக கொட்டம் வைத்து இந்திரா பராமரித்து வந்த நிலையில், வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் இந்தக் கொட்டத்தில் யானை இருந்தாலே அதிசயம்தான். பெரும்பாலும் வேனில் ஏற்றி எங்கேனும் கொண்டு சென்றுவிடுவார்கள் என்று அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறினர்.

இதுகுறித்து மதுரை வன அலுவலர் செல்வக்குமார் கூறியதாவது, 'தற்போது நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு துறை ரீதியிலான உத்தரவு பெறப்பட்டவுடன், மலாச்சி யானையை முகாமுக்குக் கொண்டு செல்வோம். இந்த நடைமுறைகள் அடுத்த வாரத்திற்குள் முழுமை பெற்றுவிடும். உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி வனத்துறையால் மலாச்சி யானை பராமரிப்புச் செய்யப்படும்' என்றார்.

தற்போது அழிந்து கொண்டிருக்கும் பேருயிரியான யானை, பூமிப் பந்தின் இருப்பிற்காக ஆற்றும் பணி மகத்தானது. ஆனால் நகரமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக அவற்றின் இருப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில், வனத்திலிருந்து கைப்பற்றி வந்து, தெருக்களில் பிச்சையெடுக்க வைப்பதும், வேடிக்கை காட்டி வித்தைக்கு தயார்ப்படுத்துவதும் தவறான ஒன்று என நம் சட்டங்கள் வலியுறுத்தி வருகின்றன. அதனை மீறி இதுபோன்று செயல்படும் சிலருக்கு மலாச்சி யானை குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது மட்டுமல்ல... ஆகச் சிறந்ததுமாகும்...Conclusion:
Last Updated : Jun 15, 2019, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.