ETV Bharat / state

"புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.25,000 செலுத்துங்கள்"-புகையிலை விற்றவர் ஜாமின் பெற நிபந்தனை

HC Madurai Bench: தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த வழக்கில் ஜாமீன் கோரிய நபரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்படும் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் செலுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

HC Madurai Bench
உயர்நீதிமன்ற மதுரை கிளை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 7:04 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த கார்த்திக், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தனக்கு ஜாமீன் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை ஆகியவை விற்பனை செய்ததாகக் கூறி என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது மனுதாரர் தரப்பில், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தண்டபாணி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்படும் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி.. வைரலாகும் முன்னாள் டிஜிபி ரவியின் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.