ETV Bharat / state

Maha Shivratri: கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக்கூடாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி - HC Madurai Bench ordered not to Caste discriminate

உயர் சாதியினர் தங்களை கோயில் வழிபாடு செய்யவிடாமல் தடுப்பதாகவும்; எனவே, மகா சிவராத்திரி விழாவில் தங்களை குல சாமி பூஜை செய்ய அனுமதிக்கக் கோரிய மனு விசாரணையில், அனைத்து தரப்பினரும் அமைதியாக வழிபாடு நடத்துவதை மாவட்ட நிர்வாகம், காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 17, 2023, 1:17 PM IST

மதுரை: உயர் சாதியினர் தங்களை கோயில் வழிபாடு செய்யவிடாமல் தடுப்பதாகவும் மகா சிவராத்திரி விழாவில் தங்களை குல சாமி பூஜை செய்ய அனுமதிக்க கோரியும் வழக்கு விசாரணையில் அனைவரும் அமைதியான முறையில் வழிபாடு செய்வதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இதனை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சார்ந்த மேடையாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உயர் சாதியினர் தங்களை கோயில் வழிபாடு செய்யவிடாமல் தடுப்பதாகவும்; எனவே, 'மகா சிவராத்திரி' விழாவில் (Maha Shivratri) தங்களை குல சாமி பூஜை செய்ய அனுமதிக்க கோரி, ஒரு தாக்கல் செய்த மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகாவில் உள்ளது, அருள்மிகு மாதரசி அம்மன் கோயில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோயில் இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் இந்த கோயில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக குலதெய்வ கோயிலாக வழிபட்டு வருகின்றோம். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய உயர் சாதியினர் சிலர் இந்த கோயிலில் எங்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.

இந்த கோயில் உயர் சாதியினருக்கு சொந்தமான கோயில் என்றும் உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால், இந்த கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலாகும். எனவே, இந்த வருடம் நாளை (பிப்.18) நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபாடு செய்ய தங்களுக்கு அனுமதி வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்திருந்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பட்டியல் வகுப்பைச் சார்ந்த எங்களை கோயிலில் வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்' என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் இன்று (பிப்.17) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக்கூடாது எனவும் அனைவரும் சமமாக ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டு அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு நடத்துவதை மாவட்ட நிர்வாகம், காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறி இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: பி.ஜி.ஆர்.எனர்ஜி நிறுவனத்திற்கு ரூ.4,442 கோடி ஒதுக்கீட்டில் ஊழல்.. சிபிஐ விசாரிக்கக் கோரி மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.