ETV Bharat / state

'அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் திங்கட்கிழமை நல்ல முடிவு வரும்' - அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்

'அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் திங்கட்கிழமை நல்ல முடிவு வரும்'

author img

By

Published : Oct 29, 2020, 3:45 PM IST

Updated : Oct 29, 2020, 6:16 PM IST

15:42 October 29

நீட் தேர்வில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீடு குறித்து திங்கட்கிழமை நல்ல முடிவு எட்டப்படும் என நீதிமன்றம் நம்புகிறது எனக் கூறி நவம்பர் 2ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது

நீட் தேர்வு 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. 

அப்போது அரசு தரப்பில் கர்நாடக மாநிலத்தில் சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது எனவும்; அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் உயர் நீதிமன்றக்கிளையில் எடுத்துரைக்கப்பட்டது. 

மனுதாரர் தரப்பில் கர்நாடக மாநிலத்தில், மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு 15 விழுக்காடும் கன்னட மொழியில் பயிலும் மாணவர்களுக்கு 5 விழுக்காடும் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.  அப்போது நீதிபதி கூறும்போது, நீதிபதி கலையரசன் ஆய்வறிக்கையில் அரசு மாணவர்கள் வேலை செய்துகொண்டே படித்து வருகின்றனர் என்பது தெரியவருகிறது. இதனை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் உள் ஒதுக்கீடு தொடர்பாக தவறான கருத்துகள் வெளியிடுபவர்களுக்கு உண்மை நிலை புரியும். அரசியல் கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி தேச நலனுக்கு எதிராகச் செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2 மாதங்களுக்கு முன்பே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, அக்டோபர் 16ஆம் தேதி முடிவுகள் வெளியாகி தற்போது வரை கலந்தாய்வுகள் நடைபெறாமல் உள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை மொத்தமாக 14 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இந்த ஆண்டு நீட் தேர்வில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் எத்தனை பேர் தேர்வு பெற்றுள்ளனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

அரசு தரப்பில் 400 முதல் 500 மாணவர்கள் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. பின் நீதிபதிகள் கூறும்போது, அரசு மாணவர்களின் உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்தப்பட்டால் 200 முதல் 300 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்கும் என்றும் நீதிமன்றம் கருதுகிறது.

சட்ட விதி 361இன் படி ஆளுநருக்கு உத்தரவிடவோ, கேள்வி எழுப்பவோ நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. ஆனாலும் சட்ட விதி 200இன் படி ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பின் கனவை மனதில்கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அரசமைப்பு பொறுப்பில் உள்ளவர்கள் பதில் அளிக்கும் அளவிற்கு நடந்து கொள்ள மாட்டார்கள் என்னும் நம்பிக்கை காரணமாகவே, இது போல் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. 

நீட் தேர்வில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீடு குறித்து திங்கட்கிழமை நல்ல முடிவு எட்டப்படும் என நீதிமன்றம் நம்புகிறது எனக் கூறி நவம்பர் 2ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Last Updated : Oct 29, 2020, 6:16 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.