திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் நிலை மிக தீவிரமாக பரவி வருகிறது. வழிபாட்டு கூட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
மதுக்கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கரோனா பரவல் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும். மேலும் கரோனா பரவல் சரி ஆகும் வரை அனைத்து மதுக்கடைகளையும் மூட மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா சிகிச்சை கட்டணங்களை நெறிப்படுத்தவேண்டும்: கமல் ஹாசன் வலியுறுத்தல்