ETV Bharat / state

தேசிய அளவில் டிரெண்டாகும் 'நந்தினியை விடுதலை செய்' ஹேஷ்டேக்! - டிரெண்ட்

மதுரை: மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடி வரும் வழக்கறிஞர் நந்தினி, நீதிமன்ற அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்யக் கோரும் 'நந்தினியை விடுதலை செய்' எனும் ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

நந்தினி
author img

By

Published : Jun 29, 2019, 9:34 PM IST

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி, தனது தந்தையுடன் இணைந்து மது ஒழிப்பு, ஹைட்ரோகார்பன் திட்டம், ஸ்டெர்லைட், நீட் தேர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளுக்காக துணிச்சலாகப் போராடி வருகிறார். இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தின்போது அவர்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஜூன் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது போதைப் பொருளா, உணவுப் பொருளா, மருந்துப் பொருளா என்றும், இந்திய குற்றவியல் சட்டம் 328படி டாஸ்மாக் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது குற்றமில்லையா..? என்று நந்தினி வாதிட்டார்.

நந்தினியின் திருமண அழைப்பிதழ்
நந்தினியின் திருமண அழைப்பிதழ்

இதனையடுத்து நீதிமன்றத்தை அவதூறு செய்த குற்றத்துக்காக நந்தினியை வரும் ஜூலை 9 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று மாலை நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜூலை 5ஆம் தேதி நந்தினிக்கும் குணா ஜோதிபாசு என்பவருக்கும் மதுரையில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், திருப்பத்தூர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் 'நந்தினியை விடுதலை செய்' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

Intro:'நந்தினியை விடுதலை செய்' - தேசிய அளவில் டிரெண்டிங் ஆகும் நந்தினியின் கைது

மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடி வரும் வழக்குரைஞர் நந்தினி, அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்யக் கோரும் 'நந்தினியை விடுதலை செய்' என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகிறது.
Body:'நந்தினியை விடுதலை செய்' - தேசிய அளவில் டிரெண்டிங் ஆகும் நந்தினியின் கைது

மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடி வரும் வழக்குரைஞர் நந்தினி, அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்யக் கோரும் 'நந்தினியை விடுதலை செய்' என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகிறது.

மதுரையை சேர்ந்த வழக்குரைஞர் நந்தினி, தனது தந்தையாருடன் இணைந்து சமூகம் சார்ந்த பல்வேறு சிக்கல்களில் துணிச்சலாகப் போராடி வருகிறார். இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தின்போது அவர்மீது வழக்கொன்று காவல்துறையால் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஜூன் 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கின் குறுக்கு விசாரணையின்போது டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது போதைப் பொருளா..? உணவுப் பொருளா..? அல்லது மருந்துப் பொருளா..? இந்திய குற்றவியல் சட்டம் 328-ன்படி டாஸ்மாக் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது குற்றமில்லையா..? என்று நந்தினியின் தரப்பில் வாதம் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற அவதூறு என்ற அடிப்படையில் நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா வருகின்ற ஜூலை 9-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று மாலை நந்தினி மற்றும் அவரது தந்தையார் ஆனந்தன் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வருகின்ற ஜூலை 5-ஆம் தேதி நந்தினிக்கும் குணா ஜோதிபாசு என்பவருக்கும் மதுரையில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், திருப்பத்தூர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் 'நந்தினியை விடுதலை செய்' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.