மதுரை: சாட்டை துரைமுருகன் யூ-டியூபில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
இதையடுத்து சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக் கோரி அவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சாட்டை துரைமுருகனிடம் அவதூறுகளை பரப்ப மாட்டேன் என்ற உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை பிணையில் விடுதலை செய்தது.
இந்நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே அவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (ஜன.27) நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்ததது. அப்போது நீதிபதி வழக்கு தொடர்பான முழு விபரங்களை தாக்கல் செய்யும்படி அரசு தரப்பிடம் தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதி வழக்கு விசாரணையை பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: நகர்புற உள்ளாட்சி தேர்தல் - விஜய் மக்கள் இயக்கம் போட்டி