ETV Bharat / state

சொகுசு காரில் கஞ்சா கடத்தியவர் கைது: தலைமறைவான மனைவியை தேடும் போலீசார்

மதுரையில் சொகுசு காரில் கஞ்சா கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது மனைவியை தேடி வருகின்றனர்.

கஞ்சா கடத்திய நபர் கைது
கஞ்சா கடத்திய நபர் கைது
author img

By

Published : Mar 14, 2023, 10:10 PM IST

மதுரை: மதுரை மாநகருக்கு உட்பட்ட ஜி.ஆர்.நகர் 3வது தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மனைவி விஜயலட்சுமி. உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான், கஞ்சா கடத்திய வழக்கில் பரமேஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை மாநகர போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பரமேஸ்வரன் - விஜயலட்சுமி தம்பதியர் ஜி.ஆர்.நகரில் கடந்த ஓராண்டாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடச்சனேந்தல் பகுதியில் போலீசார் அண்மையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது காருக்குள் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, கஞ்சாவை கடத்தி வந்த பரமேஸ்வரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சொகுசு கார்களில் கஞ்சாவை கடத்தி வந்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் இதன் மூலம் பரமேஸ்வரன் பல லட்ச ரூபாய் சம்பாதித்ததும் கண்டறியப்பட்டது. பின்னர் பரமேஸ்வரனிடம் இருந்து 5 சொகுசு கார்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் ரூ.4.30 லட்சம் ரொக்கம், 73 கிராம் தங்க நகைகள், 14 செல்போன்கள், 2 மோடம், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பரமேஸ்வரனுக்கு உதவியாக இருந்ததாக அவரது மனைவி விஜயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரையில் ஆடம்பர கார்களில் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரூ.1.25 கோடி மோசடி செய்த அரசு மாணவர் விடுதி காப்பாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.