மதுரையில் மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான முருகவேல் ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் வருகின்ற சனிக்கிழமை மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
மேலும், "உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கண் துடைப்புக்காக மட்டுமே நடைபெறும். அதிமுகவை சேர்ந்தவர்கள்தான் 99 விழுக்காடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்" எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: வாக்குக்காக பிரியாணி, பணம் கொடுப்பதாக எழுந்த புகார்