மதுரை மாவட்டத்தில் நான்கு கோயில் யானைகள், தனியாருக்கு சொந்தமான 3 யானைகள் உட்பட மொத்தம் ஏழு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மீனாட்சி அம்மன் கோயில் பார்வதி யானை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெய்வானை யானை, கள்ளழகர் திருக்கோயில் சுந்தரவல்லி தாயாரின் யானைகள் அந்தந்த கோயில்களில் பராமரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள மூன்று கோயில் யானைகளின் உரிமைச் சான்றிதழ் காலாவதியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு வளர்ப்பு யானை மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டம் 2011இன் படி வளர்ப்பு யானைகளுக்கு உரிமைச் சான்றிதழ் வனத்துறையால் வழங்கப்படுகிறது.
![ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-02-elephant-ownership-certificate-script-7208110_01122022105831_0112f_1669872511_661.jpg)
வனத்துறை சார்பாக வழங்கப்படும் உரிமைச் சான்றிதழில் யானையின் எடை வயது, பெயர், உயரம், அதனுடைய உடல்நிலை, புகைப்படம் அடங்கி விவரங்கள் முதன்மை தலைமை வன காப்பாளரால் வழங்கப்படும்.
தமிழ்நாடு முதன்மை தலைமை வனவிலங்கு காப்பாளர் மூலம் வழங்கப்படும் 3 உரிமைச் சான்றிதழ் காலாவதியாகி உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது.
![ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-02-elephant-ownership-certificate-script-7208110_01122022105831_0112f_1669872511_74.jpg)
தமிழ்நாடு வளர்ப்பு யானை மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வளர்ப்பு யானையை பராமரிக்க பத்து நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில் யானைகளுக்கு இந்த நிபந்தனைகளை முறையாக பின்பற்றப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் லட்சுமி யானை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள கோயில் யானைகளுக்கு உரிய உரிமைச் சான்றிதழ் இல்லாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி: யானை லட்சுமி மயங்கி விழுந்த சிசிடிவி காட்சி!