மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. விவசாயியான வெள்ளைச்சாமிக்கு வெள்ளத்தாய் என்ற மனைவியும் செல்வம், வாசிமலை, வேல்முருகன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இவரது தோட்டத்து வீட்டில் கட்டடப் பணி நடைபெறுவதால் அவர் இரவு தூங்குவதற்காக அங்கு சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. காலையில் அவரது மகன்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வீட்டின் முன்பு வெள்ளைச்சாமி வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதன் பின்னர், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த எழுமலை காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கான காரணம் மற்றும் கொலை செய்த நபர்களை எழுமலை காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இரவில் தூங்கச் சென்றவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.