கரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசு உத்தரவின்படி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மார்ச் 17ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்குபோல், போலியான கணக்கு ஒன்றை உருவாக்கி காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ட்விட் ஒன்றை செய்துள்ளார்.
அதில், கரோனா காரணமாக உடனடியாக பல்கலைகழகத்தை மூடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அந்த போலி ட்விட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையடுத்து காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல் துறையினர் போலி ட்விட் செய்த நபர் குறித்து விசாரித்துவருகின்றனர்.