ETV Bharat / state

எர்ணாகுளம் டூ வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு - Ernakulam to velankanni special train live status

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எர்ணாகுளம் டூ வேளாங்கண்ணி சிறப்பு ரயில்
எர்ணாகுளம் டூ வேளாங்கண்ணி சிறப்பு ரயில்
author img

By

Published : Jan 4, 2023, 6:32 AM IST

மதுரை: கொல்லம், தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில் நிலையங்கள் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த ரயில்கள் ஜனவரி மாதம் முதல் வாரம் வரை மட்டும் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை பயணிகளின் வசதிக்காக ஜனவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) ஜனவரி 7, 14 ஆகிய சனிக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 01.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 8, 15 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 06.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: திரையரங்கில் வெளி உணவு கொண்டு செல்ல தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.