மதுரை மாநகர் சின்ன சொக்கிகுளம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவர் மென்பொருள் பொறியாளராக மட்டுமன்றி டேக்வாண்டோ எனும் தற்காப்புக் கலையின் மீது அதிக ஈடுபாடும் கொண்டவர்.
சாதனைகள் படைப்பதில் ஆர்வம் கொண்ட இவர், இன்று (ஜூலை25) ஒரு நிமிடத்தில் 37 கான்கிரீட் கற்களை தனது கால்களால் உடைத்து சாதனை படைத்துள்ளார். நாராயணனின் இந்த சாதனையை கின்னஸ் சாதனை புத்தக நிறுவனம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மோடிக்கு வெற்றியை அர்ப்பணித்த நாராயணன்
கடந்த 2016 முதல் இன்று வரை 24 கின்னஸ் விருதுகளை தனது வசமாக்கி உள்ள நாராயணன், தன் வெற்றியை இந்திய பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாகக் கூறியுள்ளார்.
கால்களால் கான்கிரீட் கற்களை உடைக்கும் முயற்சி, தமிழ்நாட்டில் முதல்முறையாக மதுரையில் நாராயணனால்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Tokyo Olympics: பி வி சிந்து அபார வெற்றி