மதுரை: காமராஜபுரம் கக்கன் தெருவைச் சேர்ந்தவர் குமரையா (46). இவர் பழைய குயவர்பாளையம் சாலையில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் முனீஸ்வரன் (19) அதே உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் வாசுதேவன், வசந்தகுமார், சதீஷ்குமார், செல்வகுமார் ஆகிய நான்கு பேர் உணவகத்தில் உணவு உண்பது போல் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதனைக் கண்ட முனீஸ்வரனும், குமரையாவும் உணவகத்தில் மது அருந்தக்கூடாது என தடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த நால்வரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முனிஸ்வரனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து குமரையா கொடுத்த புகாரின் பேரில் தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாசுதேவன், வசந்தகுமார், சதீஷ்குமார், செல்வகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நடுவழியில் கைதானவர்கள் இருந்த வாகனம் நிறுத்தப்பட்டது ஏன்?