ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும்விதமாக 'ஹைட்ரோகார்பன் எடுக்காதே! விவசாயத்தை கெடுக்காதே!' என்ற ஒருநாள் கருத்தரங்கம் தமிழக மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் பட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளது.
இதற்கு அனுமதி வழங்க அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் தங்ககுமரவேல் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, 'மனுதாரரின் கோரிக்கை குறித்து, பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் உரிய பரிசீலனை செய்து ஒருநாள் கருத்தரங்கம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும்.
மேலும் சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையில் கருத்தரங்கு நடத்த உரிய நிபந்தனைகளை பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் விதிக்கலாம்' எனக் கூறினார்.