ETV Bharat / state

'கள்ளக்குறிச்சி விவகாரம் போல, சடலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்!' - நீதிபதி அறிவுரை

author img

By

Published : Oct 20, 2022, 11:33 AM IST

Updated : Oct 20, 2022, 12:42 PM IST

உயிரிழந்த மாணவரின் உடலை வைத்து அரசியல் செய்வது அண்மைக்காலங்களாக வழக்கமாகி வருகிறது என்றும்; மாணவர்களின் சடலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.

’கள்ளக்குறிச்சி விவகாரம் போல் பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்...!' - நீதிபதி அறிவுரை.

மதுரை: தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நாங்கள் பட்டியல் இன சமூகத்தைச் சார்ந்தவர்கள். எனது இரண்டாவது மகன் சீனி, கடையநல்லூரில் உள்ள இந்து நாடார் உறவின்முறை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளியில் உள்ள ஆசிரியர்களால் எனது மகன் பல இன்னல்களை அனுபவித்து வந்தான்.

பள்ளியில் சாதியப் பாகுபாடா? நாங்கள் பட்டியல் இனத்தைச்சேர்ந்தவர்கள் என்பதால் சில ஆசிரியர்கள் எனது மகனை வேண்டுமென்றே, சாதி ரீதியாக துன்புறுத்தியும் வந்தனர். எனது மகன் கல்வியில் மிகவும் ஆர்வமாக உள்ள மாணவன். ஆசிரியர்களின் சாதி ரீதியான நடவடிக்கை குறித்து ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த அக்.14ஆம் தேதி சில ஆசிரியர்களால் எனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளான். ஆனால், எனது வீட்டில் மகன் தற்கொலை செய்து கொண்டதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது. எனது மகன் உயிரிழப்பில் மர்மம் உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் எனது அனுமதி இன்றி எனது மகனின் உடலை உடற்கூராய்வு செய்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தைக் காப்பாற்றும் நோக்கில் காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

எனவே, எனது மகனின் உடலை மருத்துவ நிபுணர் குழு அமைத்து மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சதிகுமார் சுகுமாரா குரூப் முன்னிலையில் நேற்று (அக்.19) விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”மாணவனின் உடல் மருத்துவர் குழு அமைத்து உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. உடலை வாங்க மறுப்பதால் தினந்தோறும் 600-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

விசாரணை நடக்கும்-உடலை தகனம் செய்க: இதனைத்தொடர்ந்து நீதிபதி, 'சமீபகாலமாக சடலத்தை வைத்து அரசியல் செய்வது வாடிக்கை ஆகிவிட்டது. இதற்கு சிறந்த உதாரணம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு எனக் கூறிய நீதிபதி மாணவனின் மரணம் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதால் மாணவனின் உடலை அக்டோபர் காலை 10 மணிக்குள் பெற்றோர்கள் வாங்கி இறுதி மரியாதை செய்ய வேண்டும்.

தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் காவல்துறை கண்காணிப்பாளர் ஒன்றிணைந்து மாணவனின் உடலை தகனம் செய்யலாம்' எனத் தெரிவித்தார். நீதிபதி வழக்கை தென் மண்டல காவல்துறை தலைவர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள ஒரு அலுவலரை வைத்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: ஆதீனம் ஆன்மீக மடமா? இல்லை வியாபார நிறுவனமா? - நீதிபதிகள் கேள்வி

Last Updated : Oct 20, 2022, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.