ETV Bharat / state

வெறி நாய் கடித்ததில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி - etv bharat

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முன்பு வெறி நாய் கடித்ததால் 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வெறி நாய் கடித்ததில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

author img

By

Published : Aug 30, 2021, 6:15 PM IST

மதுரை: அரசு இராசாசி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. அவ்வப்போது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை நாய் கடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இன்று (ஆக.30) 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்பட 5 பேரை நாய் கடித்துள்ளது. தற்போது அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெறி நாய்கள் தொல்லை

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், "இப்பகுதியில் வெறி நாய்கள் தொல்லை அதிகமாகிவிட்டது. தினமும் நான்கு முதல் ஐந்து பேர் வரை பாதிக்கப்படுகின்றனர்.

5 பேர் மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனை நிர்வாகத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாநகராட்சி உடனடியாக நாய்களை பிடித்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்" என்றனர்.

இதையும் படிங்க: தனியார் பேருந்து ஓட்டுநர் மீது பாஜக வழக்கறிஞர்கள் தாக்குதல்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.