ETV Bharat / state

அரசியலுக்காக நீட் விவகாரத்தில் திமுக தவறாக செயல்பட்டு வருகிறது - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு - puthiya thamizhagam

அரசியலுக்காக நீட் விவகாரத்தில் திமுக தவறாக செயல்பட்டு வருகிறது என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியலுக்காக நீட் விவகாரத்தில் திமுக தவறாக செயல்பட்டு வருகிறது - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

author img

By

Published : Sep 12, 2022, 10:49 PM IST

மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மதுரையிலிருந்து பரமக்குடி சென்றபோது பல்வேறு இடங்களில் காவல் துறை தடுத்து நிறுத்தியது. இதனால் பல மணி நேரத்திற்கும் மேலாகப் பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவானது.

பரமக்குடிக்கு செல்லவிடாமல் காவல் துறை வாகனங்கள் குறுக்கே நிறுத்தப்பட்டு, எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் வேறு அமைப்புக்கு அஞ்சலி செலுத்த காவல் துறை அனுமதி வழங்கி ஒரே சமூகத்திற்கு உள்ளாகவே மோதலை உருவாக்க காவல் துறை நினைக்கிறது.

இமானுவேல் சேகரன் நினைவிடப்பொறுப்பை மாற்ற வேண்டும். புதிய தமிழகம் கட்சியிடம் நினைவிடப் பொறுப்பை வழங்க வேண்டும். இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி செலுத்தக்கூடாது என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.

திமுக தேர்தல் நேரத்தில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தது. ஒரு வாக்குறுதியையும் திமுக செயல்படுத்தவில்லை. அனைத்து தேர்தல் வாக்குறுதிக்கும் நேர்மாறாக திமுகவின் நடவடிக்கைகள் உள்ளன. மின் கட்டண உயர்வால் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். மின்சார வாரியத்தில் உள்ள ஊழலை சரி செய்தாலே மின் கட்டண உயர்வு தேவையில்லை. வருகின்ற செப்டம்பர் 20இல் மின் கட்டண உயர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். நீட் தேர்வு தோல்வியின் சரிவுக்கு திமுக தான் பொறுப்பு.

திமுகவின் தவறான பிரசாரத்தால் நீட் தேர்வை மாணவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. இன்றைய சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அரசியலுக்காக நீட் விவகாரத்தில் திமுக தவறாக செயல்பட்டு வருகிறது.

நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக பொய் பிரசாரம் செய்கிறது. தற்போது முதலமைச்சர் சர்வாதிகார போக்குடன் பேசி வருகிறார். மக்களின் குரல்களை முதலமைச்சர் செவி சாய்த்து கேட்பதில்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: நரேந்திர மோடி போன்று ஒலிக்கும் தேவேந்திரன்: பிரதமரின் கூற்றை நினைவுகூர்ந்த அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.