ETV Bharat / state

விஜயகாந்த் விரைவில் பரப்புரை செய்கிறார்? - பிரேமலதா - விரைவில் பரப்புரை செய்கிறார்

மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரப்புரை மேற்கொள்வது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் தெரிவிக்கப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா
author img

By

Published : Apr 13, 2019, 11:47 AM IST

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக அரசு மீது ரபேல் விமான ஊழல் வழக்கு உள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ’நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்தான் நீதிமன்றம் தண்டனை வழங்கும்.

விஜயகாந்த் விரைவில் பரப்புரை செய்கிறார்? - பிரேமலதா

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து எதுவும் சொல்ல முடியாது’ என்றார்.

மேலும் பேசிய அவர், ”22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். சாதிக் பாட்ஷா மனைவி மீதான தாக்குதல் என்பது கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு உதாரணம் ஆகும்.

அதேபோல் உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும். இவர்கள் அனைவரும் விரைவில் தண்டனை பெறுவது உறுதி. எங்கள் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. ஆகையால் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றிப் பெறும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரப்புரை மேற்கொள்வது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் தெரிவிக்கப்படும்” என்றார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
12.04.2019

மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி:

_ரபேல் விமான ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு_

எந்த குற்றச்சாட்டும் நிருபணம் ஆனால் தான் தண்டனை,
சும்மா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து எதுவும் சொல்ல முடியாது.
குற்றம் யார் செய்து இருப்பின் தண்டனை நிச்சயம்.

_திருப்பங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு_

18 தொகுதியுடன் இடைத் தேர்தல் வரும் என எதிர் பார்த்தோம்.  ஆனால் 4  தொகுதி இடைத் தேர்தல்  தாமதமாக அறிவித்துள்ளனர்.

அதிலும் எங்கள் கூட்டணி மிக பெரிய வெற்றி பெறும்.

_தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்ய வருவாரா என்ற கேள்விக்கு_

அது பற்றி 2 அல்லது 3 நாளில்  தெரிவிக்கப்படும்

_சாதிக் பாட்சா மனைவி மீதான தாக்குதல் குறித்த கேள்விக்கு_

கூடா நட்பு கேடாய் முடியும் சாதிக் பாட்ஷா மனைவி புகார் தெரிவித்ததும் அவர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் குடும்பம் ரெம்ப பாதிக்கப்பட்டுள்ளது.

_எதிர்கட்சிகளின் தலைவர்கள், முக்கிய இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு குறித்த கேள்விக்கு_

வருமான வரித்துறை தனக்கு  தகவலின் அடிப்படையில் சோதனை செய்கிறது.

ரெய்டுகளில் உண்மை என நிருபணமாகி உள்ளது.

உப்பு தின்னவன் தண்ணிர் குடிக்க தான் வேண்டும்.

_தமிழக தேர்தல் நிலவரம் குறித்த கேள்விக்கு_

ரெம்ப நன்றாக உள்ளது.
40 தொகுதிகளிலும்  பிரச்சாரம் செய்கின்றேன்.

அடுத்து 2 நாட்கள் பிரதமர் மோடியுடன் பிரச்சாரத்தில் பங்கேற்கின்றேன்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளேன்.

அனைத்து இடங்களிலும் மக்களிடையே பெரும் வரவேற்ப்பு உள்ளது.
மிக பெரிய வெற்றி பெறுவோம்.

மத்திய அமைச்சரவை பங்கு பெற வாய்ப்பு உள்ளதா என்பதற்கு அதைப்பற்றி இப்போது கூறமுடியாது.

பொறுத்திருந்துதான் கூறவேண்டும். 40 MP களும் டெல்லி செல்ல வேண்டும். அதன் பிறகு கேபினட்டில் சேர்வது குறித்து முடிவு செய்யப்படும் என பிரேமலதா கூறினார்.

Visual send in mojo kit
Visual name  : TN_MDU_06_12_PREMALATHA,_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.