மதுரை: தமிழ்ப் பேரரசு கட்சித்தலைவரும் திரைப்பட இயக்குநருமான கௌதமன் மதுரையில் செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் சமூகநீதி திட்டமிட்டு மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வேலை தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கே என்று திமுக அரசு சட்டமாக உடனடியாகக் கொண்டுவர வேண்டும்.
தமிழ் தேசியம் என்ற பெயரில் சில கட்சிகள் போலியான அரசியலை நடத்துகின்றன. ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாகச் சாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பிற்குப் பின் இட ஒதுக்கீடு அதிகமாக இருந்தால் திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள். இட ஒதுக்கீட்டை தாமதித்தால் தமிழ்நாடு அரசுக்கு எதிராக எந்த மாதிரியான போராட்டங்களை முன்னெடுப்போம் என அரசுக்குத் தெரியும்.
தமிழர் அறத்தோடு சீமான் நடந்துகொள்ள வேண்டும். நாம் தமிழர் கட்சியினர் பேச்சு தமிழர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. வன்மத்தை உருவாக்குவதால் தமிழ் தேசியம் வெல்லாது என உரிமையோடு சீமானுக்குச் சொல்கிறேன். அறத்தோடு போராடுவதுதான் போராட்டம். நேர்மையான தமிழ் தேசியத்தை சீமான் பேச வேண்டும்.
அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் திட்டத்தை வரவேற்கிறோம். உரிய இட ஒதுக்கீட்டை வழங்கினால்தான் அனைவருக்குமான சமூகநீதி நிலைநிறுத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 70% விரைவில் பெறுவோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்