ETV Bharat / state

ஆக்கிரமிப்பிலுள்ள தருமபுர ஆதீன சொத்துகள்..ஏன் மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை - நீதிபதிகள் கேள்வி - ஏன் மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை

தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான சொத்துக்களில் ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஆக்கிரமிப்பிலுள்ள தருமபுர ஆதீன சொத்துகள்..ஏன் மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை

author img

By

Published : Oct 20, 2022, 10:14 AM IST

மதுரை: திருச்சியைச் சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “ஆதீன மடங்களில் தொன்மையான, பழமையான, மிகவும் பிரபலமான மடங்களில் தருமபுர ஆதீன மடமும் ஒன்று. தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரங்களை பறைசாற்றும் மடங்களில் இதுவும் ஒன்று.

இம்மடத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிலங்களும் கோயில்களும் உள்ளன. இந்த கோயில்களை, தருமபுர ஆதீன மடம் பராமரிப்பு செய்து வருகிறது. தற்போது விலை உயர்ந்த பல்வேறு நிலங்கள் மூன்றாம் நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சியில் உள்ள உலகப்புகழ் பெற்ற உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில், பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.

இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவரது பாடல் பெற்ற சிறப்புப் பெற்றது. இந்த கோயிலுக்கு அருகே சுமார் ரூ.150 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலங்கள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நிலங்கள் ஆதீனத்திற்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரையும் ஆக்கிரமிப்பு நபர்களிடமிருந்து இடம் மீட்கப்படவில்லை. இதுகுறித்து, பல தடவை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இடங்களை மீட்டு, ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று (அக்.19) விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திக், தருமபுர ஆதீன மரத்திற்கு சொந்தமான இடங்கள் என்பதற்கான பல்வேறு ஆவணங்களை நீதிபதிகள் முன் தாக்கல் செய்தார்.

அவற்றைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? சம்பந்தப்பட்ட இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளது யார்.. யார்..? என்ற பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதுகுறித்து நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும்” எனக்கூறி வழக்கை வரும் அக்.26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அமைச்சர் சேகர்பாபுவால் எனது உயிருக்கு ஆபத்து..? - உயர் நீதிமன்ற வழக்கறிஞர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.