மதுரை: திருச்சியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
அரசால் செயல்படுத்தப்படும் மருத்துவ காப்பீடு திட்டங்களில், தவறு செய்யும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை நோயாளிகள் உரிய மருத்துவ சிகிச்சை பெறவும் முறையான தரமான வழிகாட்டுதல்களை வகுத்து திறம்பட செயல்படுத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த பொது நல வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்த நிலையில் தீர்ப்புக்காக ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், ’அரசின் மருத்துவ காப்பீடு திட்டங்கள் குறித்து வெளிப்படையாக, தெளிவாக பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தி அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசின் மருத்துவ காப்பீடு திட்டங்களில் தகுதியான நபர்கள், எளிய முறையில் இலகுவாக சேர்ந்து பயன்பெறும் வகையில் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: வரும் ஜனவரி 4-ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்