ETV Bharat / state

கேளிக்கை பூங்காக்களுக்கு மத்தியில் 'வாசிப்பு பூங்கா' - சத்தமின்றி சாதித்த மதுரை மாநகராட்சி - மதுரை செய்திகள்

பொழுதுபோக்குவதற்காக பூங்காக்கள் உள்ள நிலையில், மாணவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் அனைவரும் வாசிப்பதற்காகவே 'படிப்பக வளாகம்' ஒன்றை உருவாக்கி மதுரை மாநகராட்சி சாதனை படைத்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த படிப்பக வளாகம் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

மதுரையில் படிப்பக வளாகம்
மதுரையில் படிப்பக வளாகம்
author img

By

Published : Feb 26, 2023, 1:29 PM IST

மதுரையில் படிப்பக வளாகம்

மதுரை: பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் அமைதியான சூழலில் வாசிப்பதையே பெரும்பாலும் விரும்புவோம். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அனைத்துவிதமான போட்டித் தேர்வுகளுக்கு தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் அனைவரும் நண்பர்களோடு கலந்துரையாடி படிக்க ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்று படிப்பது வழக்கம்.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையின் வளாகத்தில் அவ்வாறு பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் ஆங்காங்கே அமர்ந்து விவாதித்து, உரையாடி படிப்பதை இன்றைக்கும் காணலாம். காரணம், மரங்களுக்குக் கீழே அமைதியான சூழலில் படிப்பது மனதில் ஆழப்பதியும் என்பதுதான். இந்நிலையில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு அருகே மாநகராட்சி நீச்சல் குளத்தின் முன்பு, பல்வேறு வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த படிப்பக வளாகம் ஒன்று மதுரை மாநகராட்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த இடத்தில் ஆங்காங்கே கூரைகள், சிமென்ட் இருக்கைகள், நடைபாதைகள், கழிப்பறை, கண்காணிப்பு கேமராக்கள் என சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணி வரை படிக்க அனுமதி உள்ள காரணத்தால், அதற்கேற்றாற்போல் விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வளாகம் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி துவங்கி வைக்கப்பட்டு, தற்போது நாள்தோறும் சராசரியாக 100-ல் இருந்து 150 மாணவ, மாணவியர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

நமக்கு நாமே திட்டத்தின் வாயிலாக ரூ.45 லட்சமும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.75 லட்சம் செலவில் இந்தப் படிப்பகம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கூறுகையில், “போட்டித் தேர்வுகளுக்காகப் படிக்கும் மாணவ, மாணவியருக்காக ஒரு பூங்கா அமைக்க வேண்டும் என்ற யோசனையில் இந்த படிப்பக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு நீண்ட நாளைய கனவு. இன்னும் சொல்லப்போனால் இது ஒரு துவக்கம்தான். மிகச் சிறப்பாக இந்தப் பூங்காவை வடிவமைப்பதற்கான திட்டம் உள்ளது. அதனை இனி வருங்காலங்களில் செயல்படுத்துவோம்” என்றார்.

போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி வரும் ஆரப்பாளையத்தைச் சேர்ந்த இல்லத்தரசி சுகந்தி கூறுகையில், ''இந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் மிக அருமையாக உள்ளது. தங்களது வீடுகளில் அமைதியாகப் படிக்க இயலாதோர் இங்கு அமர்ந்து படிப்பதற்கேற்ற சூழல் உள்ளது. அதற்கேற்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது குரூப் 2 மெயின் தேர்வுக்காக தயாராகி வருகிறேன். இங்குள்ள கழிவறை சுத்தமானதாக இல்லை. ஆண்களுக்கும், பெண்களுக்கும் என்று தலா ஒரு கழிவறையே உள்ளது. குடிதண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பக்கத்தில் வாகனங்கள் செல்லக்கூடிய முதன்மை சாலை உள்ளதால், சத்தம் மிக அதிகமாக உள்ளது. ஆகையால், முழுவதுமாக சுற்றுச்சுவர் அமைத்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.

இங்கு படிக்க வரும் தேர்வர்களுக்கு ஏற்றாற்போல் கழிப்பறை வசதி இல்லை. மேலும் அவற்றில் போதுமான பராமரிப்பும் கிடையாது. அதேபோன்று, இருபாலர் கழிப்பறை ஒரே இடத்தில் அமைந்திருப்பதால், பெண்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் வசதி செய்திருக்கிறார்கள். ஆனால், அது முழுவதுமாக திறந்திருக்கின்ற காரணத்தால், பல்வேறு அசுத்தக்கேடு இருப்பதாக வேதனை கொள்கின்றனர்.

மேலூரைச் சேர்ந்த மகாராஜன் கூறுகையில், ''மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த வளாகம் உள்ளது. சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். கழிவறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். குடிதண்ணீர் வசதி செய்து தர வேண்டும். ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும்'' என்கிறார். இங்கு படிக்க வருவோர் பெரும்பாலும் மதுரையைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்தோராவர். மதிய உணவோடு காலை 9 மணிக்கு வருகின்ற இவர்கள், மாலை 7 மணி வரை இங்கே அமர்ந்து படித்துவிட்டே பிறகு தங்களது வீடுகளுக்குத் திரும்புகின்றனர்.

இந்த வளாகத்தில் அமைந்துள்ள கட்டடத்தில் நூலகம் ஒன்றை விரைவில் துவக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரவலாக அனைவரும் முன்வைக்கின்றனர். அந்நூலகத்தில் பள்ளிப் பாட நூல்கள் குறைந்தபட்சம் 5 செட்டுகள் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மற்றொரு மாணவர் வினோத்குமார் கூறுகையில், ''டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்காக தயாராகி வருகிறேன். மாலை நேரங்களில் வெயில் நேரடியாக விழுவதால் அச்சமயங்களில் படிக்க முடியாத நிலை உள்ளது. இப்பகுதியில் அதிக மரக்கன்றுகளை நட்டு பராமரித்தால் வளாகம் இன்னும் அமைதி சூழ்ந்து இருக்கும்'' என்றார்.

படிப்பதற்கான வாசிப்பு பூங்கா என்ற மதுரை மாநகராட்சியின் முயற்சி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கழிப்பறை, குடிதண்ணீர், நூலகம் உள்ளிட்ட மேலும் சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே இங்கு பயிலும் மாணவ, மாணவியரின் வேண்டுகோளாக உள்ளது.

இதையும் படிங்க: தனியாரிலும் ரேஷன் கடை;இலவச பொருட்கள் கிடைக்காது - மத்திய அரசு புதுஏற்பாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.