ETV Bharat / state

சாத்தான்குளம் வழக்கு விசாரணை: மேலும் ஒரு சிபிஐ அலுவலருக்கு கரோனா தொற்று

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள மேலும் ஒரு சிபிஐ அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona infection for CBI officer
Corona infection for CBI officer
author img

By

Published : Jul 26, 2020, 10:36 AM IST

Updated : Jul 26, 2020, 10:46 AM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக கடந்த 10ஆம் தேதி முதல் 10 பேர் கொண்ட சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குழுவில் இடம்பெற்றிருந்த நான்கு சிபிஐ அலுவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், குழுவில் இடம்பெற்ற மேலும் ஒரு சிபிஐ அலுவலருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது,

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, கைது செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரைக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து சிபிஐ அலுவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவதால், சிபிஐ விசாரணை மேலும் காலதாமதம் ஆகலாம் என சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை' -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Last Updated : Jul 26, 2020, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.