மதுரையில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை சிம்மக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆட்டோமொபைல் விற்பனையகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி அலுவலர்கள் அந்தக் கடையை பூட்டி சீல் வைத்தனர்.
அந்த விற்பனையகத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் தற்போது கரோனா பரிசோதனை செய்வதற்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடை முழுவதும் கிருமி நாசினியால் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், மதுரையில் பல இடங்களில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாத 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி ஊழியர்கள் சீல் வைத்துள்ளனர்.
ஆட்டோமொபைல் விற்பனையக ஊழியருக்கு கரோனா - கடைக்கு சீல் வைத்த மாநகராட்சி - ஆட்டோமொபைல் விற்பனையகம்
மதுரை: பிரபல ஆட்டோமொபைல் விற்பனையகத்தின் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்தக் கடையை மாநகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.