ETV Bharat / state

பெங்களுரு, டெல்லியிலிருந்து மதுரை வந்த மூவருக்கு கரோனா உறுதி - corona latest news

பெங்களுரு, டெல்லி ஆகிய ஊர்களிலிருந்து மதுரை விமானநிலையம் வந்த ஒரு பெண் உள்பட மூவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

madurai airport
madurai airport
author img

By

Published : May 28, 2020, 5:52 PM IST

மத்திய அரசின் அனுமதியின்படி உள்நாட்டு விமான சேவைகள் செயல்பட்டுவருகின்றன. அதன்படி மதுரை விமான நிலையத்தில் கடந்த 4 நாள்களாக விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் நேற்று பெங்களூருவிலிருந்து வந்த பெண் ஒருவருக்கும், டெல்லியிலிருந்து வந்த இளைஞர்கள் இருவருக்கும் லேசான காய்ச்சலிருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை தனிமைப்படுத்தி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவில் இன்று அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் 2 மருத்துவர்கள் தலைமையில் 23 சுகாதாரத்துறையினர் பயணிகளிடையே தீவிரப் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவைச் சேர்ந்த 7 பேர் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.