ETV Bharat / state

கரோனாவிலிருந்து மெல்ல மீண்டெழும் மதுரை! - மதுரை கரோனா பாதிப்பு விவரம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக மெல்ல குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

Madurai Rajaji govt. hospital
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை
author img

By

Published : Jul 21, 2020, 8:10 AM IST

மதுரையில் கடந்த வாரம் முன்பு வரை நாளொன்றுக்கு சராசரியாக 200இல் இருந்து 300 பேர் வரை கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இதையடுத்து நோய் தொற்றின் பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று (ஜூன் 20) ஒரே நாளில் 106 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 111 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஐந்து பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

மதுரை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து காய்ச்சல் கண்டறியும் முகாம்களை மிகத் தீவிரமாக நடத்தி வருகின்றன. அதேபோல் மாநகராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு, உடனடியாக அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்திலிருந்து இதுவரை 8ஆயிரத்து 357 பேர் சிகிச்சை பெற்றுள்ள நிலையில், தற்போது வரை நான்காயிரத்து 934 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 263 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 160 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம்-பழங்காநத்தம் புதிய பாலம்; மண் சேகரிப்பு பணி தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.