ETV Bharat / state

'வழிபாட்டுத்தலங்கள் திறப்பதை தள்ளி வைக்கவேண்டும்' - திருநாவுக்கரசர்

மதுரை: கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கும், இந்த காலகட்டத்தில் கோயிலுக்குச் சென்றுதான் கடவுளைக் கும்பிடவேண்டுமா? வீட்டிலேயே கும்பிடக்கூடாதா என கேள்வி எழுப்பிய காங்கிரஸ்‌ எம்.பி.,திருநாவுக்கரசர்; வழிபாட்டுத்தலங்கள் திறப்பதை தமிழ்நாடு அரசு தள்ளி வைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Congress mp thirunavukarasar about worship places opening

author img

By

Published : Jun 9, 2020, 12:29 AM IST

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண உதவி‌ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களுக்கான நிவாரண உதவித் தொகையாக 7,500 ரூபாயினை வழங்கவேண்டும். மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டில் இது ஒன்றும் பெரிய தொகை அல்ல.
அதேபோன்று மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாயில், நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1,500 ரூபாய் வழங்கினால், அதிகபட்சமாகவே ஒரு லட்சம் கோடி ரூபாய்தான் செலவாகும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாள்களை 100லிருந்து 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும்.

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தனியார் மருத்துவமனைகளில் 25 விழுக்காட்டிற்குப் பதிலாக 50 விழுக்காடு படுக்கை வசதிகளை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

முதலமைச்சர் மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு வந்து சேரும் நிதி குறித்து வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். வங்கிகளில் கடன் வாங்கியுள்ள சிறு,குறு விவசாயிகள் மற்றும் தொழில் சார்ந்த கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியைத் தொடர்ந்து வழங்க, மத்திய அரசு முன்வர வேண்டும்.

கரோனா வைரஸ் பரவிவரும் காலத்தில் கோயிலுக்குச் சென்றுதான் கடவுளை தரிசனம் செய்ய வேண்டுமா? வீட்டிலிருந்தே கும்பிட்டால் என்ன? கோயில், பள்ளிவாசல், தேவாலயம் என எந்த வழிபாட்டுத்தலமாக இருந்தாலும் சிறிது காலத்திற்கு அதன் திறப்பைத் தள்ளிவைக்க வேண்டும்' என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.