மதுரை: மதுரையின் மகபூப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் நித்தீஷ் தீனா (7). இவர் நவம்பர் 2ஆம் தேதி மதுரை பைக்கராவின் பிரபல ஜவுளிக் கடையில் ஜவுளி எடுக்க சென்றிருக்கிறார்.
அப்போது ஜவுளிக்கடையின் ஐந்தாவது தளத்திலிருந்து எதிர்பாராதவிதமாக சிறுவன் தவறி விழுந்து படுகாயம் அடைந்தான். பின்னர் சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுதொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் குழந்தைக்கு சிகிச்சை பார்க்க போதுமான வருமானம் இல்லாததால், அலட்சியமாக செயல்பட்ட ஜவுளிக்கடை நிர்வாகம் மூலம் உரிய நிவாரணம் பெற்று கொடுக்க வேண்டும்.
மேலும் குழந்தைக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் எனச் சிறுவனின் குடும்பத்தினர், இன்று (நவ.25) மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
இதையும் படிங்க: ரூ.10.46 லட்சத்துடன் தலைமறைவான தலைமைக் காவலர் - பணியிடை நீக்கம்