ETV Bharat / state

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் பணியிடை நீக்கம்! - Madurai district news

மதுரை:பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியரை மதுரை காமராசர் பல்கலைக் கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

:College Professor suspended for sexual assault at madurai
College Professor suspended for sexual assault at madurai
author img

By

Published : Jun 6, 2020, 5:23 AM IST

மதுரை மாவட்டம் கப்பலூர் அருகே மதுரை காமராஜர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி உள்ளது. இங்கு இளங்கலை மற்றும் முதுகலைப் பிரிவுகளில் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

இங்க பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவது, அரட்டையடிப்பது, கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டுவது என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்தார். இதனை தட்டிக்கேட்ட பெண் பேராசிரியர்களையும் அவதூறாகப் பேசியுள்ளார்.

இதையடுத்து சம்மந்தப்பட்ட பேராசிரியரின் நடத்தை குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இப்புகாரின் அடிப்படையில் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்களிடம் இக்குழு விசாரணை மேற்கொண்டது. இதற்கிடையில் கரோனா பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், கல்லூரி மூடப்பட்டது.

இந்நிலையில் தற்போது பல்கலைக் கழக நிர்வாகம் குறிப்பிட்ட பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறுமியை வன்புணர்வு செய்த முதியவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.